30 நாள் அனுமதி ஏன்? இந்திய கூட்டாளிகள் இணக்கமானவர்கள்: வெள்ளை மாளிகை கருத்து

வாஷிங்டன்: வெள்ளைமாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகள் மிகவும் இணக்கமாக நடந்து கொள்பவர்கள். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டுமென நாங்கள் கூறியதும் கேட்டுக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு ரஷ்ய எண்ணெய் வாங்க அதிபர் டிரம்பும், கருவூல அமைச்சர் ஸ்காட் பெசன்ட்டும் முழு தேசிய பாதுகாப்பு குழுவும் 30 நாள் அனுமதியை வழங்கியது. இது தற்காலிகமான அனுமதி தான். இந்த குறுகிய கால நடவடிக்கை ரஷ்யாவுக்கு பெரிய அளவில் நிதி நன்மையை வழங்காது. ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

Related Stories: