×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்பக்குளத்தில் நீராட பக்தர்களுக்கு தடை: சுத்தம் செய்யும் பணி நடக்கிறது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் வரும் 26ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

அதன்படி முதல் நாளான வரும் 26ம் தேதி சீதா ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் புஷ்கரணியில் 3 சுற்றுகள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். 2ம் நாளில் கிருஷ்ணர் ருக்மணியுடன் 3 சுற்றுகளும், 3ம் நாளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் 3 சுற்றுகளும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

பின்னர் 4ம் நாளில் 5 முறை, நிறைவு நாளான மார்ச் 2ம் தேதி 7 முறையும் மலையப்ப சுவாமி தாயார்களுடன் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளார். இதனால் தெப்பக்குளத்தை சுத்தம் செய்து சோதனை முறையில் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. இதனால் கோயில் குளத்தில் நேற்று முதல் வரும் 5ம் தேதி வரை பக்தர்கள் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, குளம் மூடப்பட்டுள்ளது என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Theppal Utsavam ,Lord ,Swami ,
× RELATED மோடி உருவபொம்மை எரிப்பு- பரபரப்பு;...