×

வளர்ந்த இந்தியாவுக்கு சிப் தயாரிப்பு அவசியம்: பிரதமர் மோடி பேச்சு

கிரேட்டர் நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஜேவரில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.3,700 கோடி செலவில் எச்சிஎல் குழுமம் மற்றும் பாக்ஸ்கான் இணைந்து உள்நாட்டில் சிப் தயாரிப்பதற்கான இந்தியா சிப் பிரைவேட் லிமிடெட் ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசுகையில், ‘‘இந்தியா தன்னிறைவு பெற்றால் மட்டுமே வளர்ந்த இந்தியா கட்டமைப்படும்.

இதற்கு இந்தியாவில் சிப் தயாரிப்பது மிகவும் முக்கியமானது. இந்த தசாப்தத்தில் தொழில்நுட்ப துறையில் இந்தியா என்ன செய்தாலும், அது 21ம் நூற்றாண்டில் நமது திறனுக்கான அடித்தளமாக மாறும்’’ என்றார். விழாவில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘ மின்னணுவியல் ஏற்றுமதியில் இந்தியா இப்போது 3வது இடத்தில் உள்ளது. இந்த ஆலையில் இருந்து 3.6 கோடி சிப்புகள் தயாரிக்கப்படும் ’’ என்றார்.

Tags : India ,PM Modi ,Greater Noida ,India Chip Private Limited ,HCL Group ,Foxconn ,Yamuna Expressway Industrial Development Authority ,Jewar, Greater Noida, Uttar Pradesh ,
× RELATED மோடி உருவபொம்மை எரிப்பு- பரபரப்பு;...