×

சைபர் பாலியல் மோசடி ம.பி.யில் 20 பேர் கைது

ஷிவ்புரி: ம.பியின் ஷிவ்புரியில் மோசடி கும்பலை சேர்ந்த சிலர் பெண்களின் பெயர்களில் வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி இருக்கின்றனர். பின்னர் அறிமுகமில்லாத சிலரை தொடர்பு கொண்டு ஆபாச அரட்டை மற்றும் பதிவுகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் போல நடித்து பாதிக்கப்பட்டவர்களிடம் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை ஆபாச படங்கள் தொடர்பான பொய்யான வழக்குகளை பதிவு செய்து அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து 20 பேரை கைது செய்தனர். அப்போது ரூ.1.07கோடி மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Shivpuri ,Shivpuri, MP ,WhatsApp ,
× RELATED உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை...