×

மகன் மேல் குருட்டு பாசம் இன்றைய திருதராஷ்டிரர் லாலு: பீகார் பா.ஜ எம்எல்ஏ மைதிலி தாக்கூர் தாக்கு

பாட்னா: மகன் மேல் குருட்டு பாசம் வைத்துள்ள லாலு தான் இன்றைய திருதராஷ்டிரர் என்று பீகார் இளம் பா.ஜ எம்எல்ஏ மைதிலி தாக்கூர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்​தின் பாஜ எம்​எல்ஏ மைதிலி தாக்​கூர்​(25). நாட்​டின் மிக இளம் வயது எம்​எல்ஏ இவர்​தான். இவர் பீகார் சட்​டப்​பேர​வை​யில் பேசும் போது,’2005ஆம் ஆண்​டுக்கு முன்பு இருந்த காலத்தை நான் நினைத்து பார்க்​கும்​போதெல்​லாம், மகா​பாரதத்​தில் அஸ்​தி​னாபுரத்தை மன்​னர் திருத​ராஷ்டிரர் ஆண்​டது​தான் ஞாபகத்​துக்கு வரு​கிறது.

மன்​னருக்கு பார்​வை​யில்​லை. அதனால் அவர் எதை​யும் பார்க்க விரும்​ப​வில்​லை. அவருக்கு அஸ்​தினாபுரத்தை பற்றி கவலை​யில்​லை. கு மகன் துரியோதனன் மட்​டுமே முக்​கி​யம். பீகார் மாநிலம் 20 ஆண்​டு​களுக்கு முன்பு கல்விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​க​வில்​லை. அதனால் பல தலை​முறை​யினர் இன்​னும் கஷ்டப்​படு​கின்​றனர்.

அப்​போது ஆட்​சி​யில் இருந்​தவர்​கள் கண்​களை​யும், காதுகளை​யும் கட்​டிக் கொண்​டனர். பீகாரில் மாலை 6 மணிக்கு மேல் வெளியே சென்​றால் ஆபத்து என மக்​கள் கூறு​வார்கள். ஆனால் இன்று அதி​காலை 3 மணிக்கு தர்​பங்​கா​விலிருந்து புறப்​பட்டு பாட்​னாவில் எனது வீட்​டுக்கு நான் பாது​காப்​பாக செல்​கிறேன். இந்த மாற்​றம் முதல்​வர் நிதிஷ் குமாரின் சிறந்த நிர்​வாகத்​தால் ஏற்​பட்​டுள்​ளது’ என்றார்.

Tags : Lalu ,Dhritarashtra ,Bihar ,BJP ,MLA ,Mythili Thakur ,Patna ,
× RELATED மோடி உருவபொம்மை எரிப்பு- பரபரப்பு;...