×

அடுத்த மாத இறுதிக்குள் நாட்டில் இருந்து நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி

கவுஹாத்தி: அசாம் மாநிலம் கவுஹாத்தியில், மத்திய ரிசர்வ் காவல் படையின்(சிஆர்பிஎஃப்) 87வது நிறுவன நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ ஜம்மு காஷ்மீரில் கல் வீச்சு சம்பவங்கள் பூஜ்யமாக குறைந்துள்ளது.

மணிப்பூரில் இனக்கலவரத்தை கையாளவும், மூன்றே ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளின் முதுகை முறிக்கவும் ராணுவம் முக்கிய பங்காற்றியது. 10 – 11 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் மூன்று பெரிய ஹாட்ஸ்பாட்கள் இருந்தன. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி ஆகியவை இருந்தன.

அந்த மூன்று ஹாட்ஸ்பாட்களும் தற்போது முன்னேற்றத்தின் மையமாக இருக்கும். ஒருகாலத்தில் குண்டுவெடிப்பு, தோட்டாக்க ளளுக்கு பெயர் பெற்றிருந்த மூன்று ஹாட்ஸ்பாட்களும் வளர்ச்சி இயந்திரமாக மாற்றப்படடு, அவை முழு நாட்டையும் முன்னேற்ற உழைக்கின்றன. ஒன்றிய பாஜ அரசு ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி வரும் மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசம் முற்றிலும் அழிக்கப்படும்” என்று உறுதிபட கூறினார்.

Tags : Union Minister ,Amit Shah ,Guwahati ,87th Raising Day ceremony ,Central Reserve Police Force ,CRPF ,Guwahati, Assam ,Union Home Minister ,
× RELATED மோடி உருவபொம்மை எரிப்பு- பரபரப்பு;...