×

ஜோதீஷ்பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் மீது போக்சோ வழக்கு பதிய உத்தரவு: உபி நீதிமன்றம் அதிரடி

பிரயாக்ராஜ்: ஜோதீஷ்பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த். இவருக்கும் உபி பா.ஜ அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் நடந்த மாக் கும்பமேளாவில் மவுனி அமாவாசை அன்று குளிக்க விடாமல் தடுத்ததாக உபி நிர்வாகத்தை அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மீது போக்சோ வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஜான்சி காவல் நிலைய அதிகாரிக்கு நேற்று சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

அசுதோஷ் பிரம்மச்சாரி மகாராஜ் மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பி.என்.எஸ் பிரிவு 69, 74, 75, 76, 79, மற்றும் 109 (அனைத்தும் பாலியல் வன்கொடுமை தொடர்பானவை) மற்றும் பி.என்.எஸ் பிரிவு 3/5/9 மற்றும் 17 ன் கீழ் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது.

இது குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் கூறுகையில்‘‘ இது புனையப்பட்ட வழக்கு. என் மீது புகார் கொடுத்தவர் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். சனாதன தர்மத்தை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரவில்லை. இங்குள்ளவர்கள் தான் அழிக்கிறார்கள். தன்னை ஜெகத்குரு என்று கூறிக்கொள்பவர்தான் சனாதனத்தை அழிக்கவும், சங்கராச்சாரியார் மீது வழக்குப்பதியவும் நடவடிக்கை எடுத்துள்ளார்’ என்றார்.

Tags : POCSO ,Jyotishpeeth Shankaracharya ,Swami Avimukteshwaranand ,UP ,UP BJP government ,Mauni Amavasya day ,Mak Kumbh Mela ,
× RELATED உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை...