- அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ரோகித் பாவர்
- பிற்பகல்
- புது தில்லி
- மகாராஷ்டிரா
- துணை தலைவர்
- அஜித் பவார்
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- சரத் சந்திரபாவர்
- பரம்
புதுடெல்லி: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கடந்த 28ம் தேதி விமான விபத்தில் மரணடைந்தார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி(சரத் சந்திரபவார்) எம்எல்ஏ ரோகித் பவார் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாராமதியில் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது, அந்த விமான வாடகை நிறுவனமான விஎஸ்ஆர் நிறுவனத்தின் சதியின் ஒரு பகுதியாக ஏற்பட்டது. தொழில்துறை மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் விஎஸ்ஆர் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளனர்.
விஎஸ்ஆர் நிறுவனம் மற்றும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் உள்ள தொடர்புகள் குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பட்டுள்ளன. இந்த தொடர்புகள் பற்றி திறமையான அதிகாரியால் சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். விமான விபத்துக்கு பொறுப்பேற்று ராம் மோகன் நாயுடு அமைச்சர் பதவியை ராஜினாமா வேண்டும். அல்லது அவரை பிரதமர் பதவி நீக்கம் செயய வேண்டும்” என வலியுறுத்தினார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ரோகித் பவார் கடிதம் எழுதி உள்ளார்.
