முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மனோகரன் பிறந்த நாள் விழா

ஓசூர், பிப்.21: ஓசூர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி தேசிய செயலாளருமான மனோகரன் பிறந்தநாள் விழா, இன்று கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, காலையில் மனோகரன் தனது பெற்றோர் சமாதிக்கு சென்று வணங்குகிறார். தொடர்ந்து, காமராஜ் காலனியில் உள்ள ஐஎன்டியூசி அலுவலகத்தில் கேக் வெட்டுகிறார். அவரது ஆதரவாளர்கள் சார்பில், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், பண்டாஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், ஓசூர் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்கள், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள். ஓசூர் நகரின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர் கே.அப்பாவு பிள்ளை. ஊராட்சி தலைவர், எம்எல்ஏ என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவரது மகன் மனோகரன், ஓசூர் காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவி வகித்து, ஓசூர் நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழி பேசுகிற மக்கள் பெருமளவில் உள்ளனர். இந்த 3 மொழி பேசக்கூடிய மக்களிடமும், கே.அப்பாவு பிள்ளை நன்கு பழகி நட்புடன் இருந்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து வந்தார். தந்தை வழியில் மனோகரனும், மக்களிடம் நட்புடன் இருந்து வருகிறார். ஓசூர் நகரின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றிய கே.அப்பாவு பிள்ளைக்கு பெருமை சேர்க்கும் விதமாக, ஓசூர் பஸ் நிலையத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: