ஓசூர், பிப்.19: ஓசூர் அருகே, அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உணவு அருந்தும் கூடத்தை பிரகாஷ் எம்எல்ஏ திறந்து வைத்தார். ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிராமத்தில், அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உணவருந்தும் கூடம் அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், ஐடிசி நிறுவனம் உணவு அருந்தும் கூடம் கட்டி கொடுத்தது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, உணவு அருந்தும் கூடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் தியாகராஜன், முத்தாலி நவீன் மற்றும் பீட்டர், மாதேஷ், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
