கிருஷ்ணகிரி, பிப். 21: கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி பஞ்சாயத்து மலைச்சந்து கிராமத்தில் அமைந்துள்ள மகா காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 6ம் தேதி திருவிளக்கு வழிபாடு, கோ பூஜை, பந்தக்கால் கொடியேற்றுதல் நடந்தது. தொடர்ந்து தினமும் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, 9.55 மணிக்கு விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் காமாட்சி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த பி.ஜி.புதூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காமாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
- மகா கும்பாபிஷேகம்
- காமாட்சி அம்மன் கோயில்
- கிருஷ்ணகிரி
- மகா காமாக்ஷி அம்மன் கோயில்
- மலைச்சந்து
- கங்கலேரி பஞ்சாயத்து
- திருவிளக்கு
