பாஜவிற்கு தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: பாஜவிற்கு தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள். அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் 2014ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார். அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.! இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் பாஜ வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி! இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான். இத்தகைய வெறுப்பு இன்ஜின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம். ‘‘தமிழ்நாடா பாஜவா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!.

Related Stories: