சாதி சான்றிதழ், வீட்டு மனைப்பட்டா கேட்டு மலைக்குறவர் மக்கள் ஆர்டிஓவிடம் மனு

மன்னார்குடி,பிப். 19: குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் வீரமணி மற்றும் நிர்வாகிகள் மன்னார்குடி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைம, தெற்குகாடு, ஆலங்காடு, எடையூர் சங்கேந்தி, மாங் குடி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மலைக்குறவர் இனமக்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டாவும், ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவசவீட்டு மனைப்பட்டாவும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவைக்கப்படட்து.

 

Related Stories: