காஞ்சிபுரம், பிப்.20: ஊத்துக்காடு ஏரியின் மீன்பிடி உரிமத்திற்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை கட்டுப்பாட்டில் உள்ள ஊத்துக்காடு ஏரியின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு 4வது முறையாக குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியிலும், மேலும் விபரங்களுக்கு தொலைபேசி: 99941 97133 மற்றும் மின்னஞ்சல்: adfmnkpm@gmail.com.ல் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
மீன்பிடி உரிமத்திற்கு இணையதள பதிவு
- காஞ்சிபுரம்
- கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- ஊத்துக்காடு ஏரி
- காஞ்சிபுரம் மாவட்டம்
- காஞ்சிபுரம் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு நிறுவனம்
