நடுபந்திக்குப்பம் கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த மலை பாம்பு

ஆர்.கே.பேட்டை, பிப்.20: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், நடுபந்திக்குப்பம் பகுதியில் வசிப்பவர் சொக்கலிங்கம். சாலையையொட்டி அமைந்துள்ள இவரது வீட்டின் அருகே 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு இருந்துள்ளது. இப்பாம்பை கண்டு அதிர்ச்சியான சொக்கலிங்கம், ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், சோளிங்கர் தீயணைப்பு துறையினருடன் விரைந்து சென்று, சாலையோரம் இருந்த மலைப்பாம்பை அரை மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டு, காட்டுப்பகுதியில் விட்டனர். இரவு நேரங்களில் மலைப் பாம்பு கிராமத்தில் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: