கதிர்வேட்டில் ரூ.14.10 லட்சத்தில் யோகா மேடை, விளையாட்டு கூடம்

புழல், பிப்.20: கதிர்வேடு பகுதிகளில் ரூ.14.10 லட்சம் மதிப்பீட்டில் யோகா மேடைகள் மற்றும் விளையாட்டு கூடம் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு, பத்மாவதி நகர் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பில் யோகா மேடையும், பிர்லா அவென்யூ பிரதான சாலையில் உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில் ரூ.6.10 லட்சத்து மதிப்பில் யோகா மேடையும், கதிர்வேடு சென்னை மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரங்களுடன் விளையாட்டு கூடம் அமைக்கும் பணி உள்ளிட்ட 3 பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை தாங்கி, 3 பணிகளையும் பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார். பின்னர், அனைத்து பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் வார்டு உதவி பொறியாளர் லோகேஷ், சுகாதார ஆய்வாளர் மதுபாலா, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கதிர்வேடு பாபு, மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராணில 31வது வார்டு மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: