தர்மபுரி, பிப்.19: தென் மாநிலங்களுக்கிடையிலான 5வது ஷூட்டிங் பால் சாம்பியன்ஷிப் போட்டி, ஆந்திர பிரதேசம் திருப்பதி மாவட்டத்தில் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற தமிழ்நாட்டு ஜூனியர் பிரிவு விளையாட்டு வீராங்கனைகள் 2ம் இடம் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் பாராட்டினார். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் தமிழ்நாடு அமைச்சு சூட்டிங் பால் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் சாக்ரடீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
தர்மபுரி வீராங்கனைகள் 2ம் இடம் பிடித்து சாதனை
- தர்மபுரி
- 5வது துப்பாக்கி சுடும் பந்து சாம்பியன்ஷிப்
- தெற்கு மாநிலங்கள்
- திருப்பதி மாவட்டம்
- ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- தெலுங்கானா
- கேரளா
