காரிமங்கலம், பிப்.18: காரிமங்கலம் வார சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 900 ஆடுகள், 700 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ரூ.75லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.72லட்சத்திற்கு மாடுகளும், ரூ.3லட்சத்திற்கு நாட்டுக்கோழிகளும் விற்பனையானது. இதில் மொத்தம் ரூ.1.50கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை காட்டிலும், கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
