திருச்செங்கோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, பிப்.11: திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, நாமக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தலைவர்கள் ராஜேஷ்குமார், சரவணன், பாமக மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர், தமாக மாவட்ட செயலாளர் செல்வக்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவி சுகந்தி, மாநில பாஜ தொழில் பிரிவு செயலாளர் வக்கீல் நாகராஜன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: