சேந்தமங்கலம், பிப்.11:சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியில் தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்த மேஸ்திரி பலியானார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள சாலையின் தடுப்புச்சுவரில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்ததில் மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
