மகளிர் 330 பேருக்கு அடையாள அட்டை

நாமகிரிப்பேட்டை, பிப்.14: நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு, 330 பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசுகையில், ‘முதல்வர் முக.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கியது, பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், சீராப்பள்ளி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜூ, பேரூராட்சி தலைவர் லோகாம்பாள், இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கலைவாணன், சண்முகசுந்தரம், கவிதா, கற்பகவள்ளி, நாகரத்தினம் சுரேஷ், தியாகராஜன், வேல்முருகன், குமார் மற்றும் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: