குமாரபாளையத்தில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

குமாரபாளையம், பிப்.14: வங்கி கணக்குகளில் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டதை திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மூன்று மாத மகளிர் உரிமைத்தொகையோடு கோடை கால சிறப்பு தொகுப்பு தொகையும் சேர்ந்து ஐந்தாயிரம் ரூபாயினை உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை மகளிரின் வங்கி கணக்கில் ஐந்தாயிரம் வரவு வைக்கப்பட்டது. இதை குமாரபாளையம் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் விஜயகண்ணன், தெற்கு நகர திமுக பொறுப்பாளர் ஞானசேகரன், முன்னாள் நகர செயலாளர்கள் செல்வம், ஜெயபிரகாஷ், மகளிரணி நிர்வாகிகள் ராதிகா, செல்வி, கௌரி, இலக்கிய அணி மல்லை ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: