திருச்செங்கோட்டில் டாஸ்மாக் கடைகளை அடைத்து வேலை நிறுத்தம்

திருச்செங்கோடு, பிப்.10: திருச்செங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும், 3 மணி நேரம் மூடி டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இதுகுறித்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த மேற்பார்வையாளர் குணசேகரன் கூறுகையில், ‘டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் எங்கள் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி, மூன்று மணி நேரம் கடைகளை அடைத்து, அடையாள வேலை நிறுத்த போராட்டம் செய்துள்ளோம். காலி பாட்டில் திட்டத்தை, அரசு எங்கள் மீது திணித்து பணி சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தனி ஆட்களை நியமிக்க வேண்டும்,’ என்றார். இந்த போராட்டத்தில், திருச்செங்கோடு பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: