சின்னமனூர், பிப்.16: தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி லட்சுமி அம்மாள் (60). கூலித்தொழிலாளி. உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல்நலம் சரியாகவில்லை. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த அவர், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. இது குறித்து சின்னமனூர் காவல் நிலைய எஸ்.ஐ. இளங்கோவன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
