மேலூர், பிப். 16: அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்னையில் ஒன்றிய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,கொட்டாம்பட்டி ஒன்றியம் உதினிப்பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில இளைஞர் அணி சார்பாக, ஒன்றிய அரசு மேற்கொண்ட ஒப்பந்த நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞரணி தலைவர் அருண் தலைமை தாங்கினார். திரளான விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.
