அரசு ஊராட்சி பள்ளியில் டார்வின் பிறந்த தினவிழா

காளையார்கோவில், பிப்.16: காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சார்லஸ் டார்வின் பிறந்த தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியை தெய்வானை தலைமையேற்றார். ஆசிரியை மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியை கமலம்பாய் வரவேற்றார்.

சிவகங்கை மாவட்ட அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, டார்வின் இயற்கை தேர்வுக் கோட்பாடு பற்றி பேசினார். மேலும் மனிதனுக்கும் மனித குரங்குக்கும் மிகத் துல்லியமான மரபு வித்தியாசமே காணப்படுகிறது. பரிணாமம் என்பது கோடிக்கணக்கான காலச் சுழற்சிக்கு இடையே நிகழ்வது. குறிப்பிட்டு நோக்கும் அளவுக்கு நிகழக் கூடியதல்ல என்கிறார் டார்வின் என்று சிறப்புரையாற்றினார்.

மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்று கேள்விகளுக்கு பதில் கூறப்பட்டது. ஆசிரியை வாசுகி, சத்துணவு உதவியாளர் அஞ்சலை கஸ்தூரி, கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். மாணவ,மாணவிகளுக்கு இயற்கை தேர்வுக் கோட்பாட்டை வழங்கிய சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தைக் கண்டு சிறப்பித்தனர்.

 

Related Stories: