தொண்டி,பிப்.16: தொண்டி பகுதியில் டூவீலர் மற்றும் வாகனங்களில் விதிமுறை மீறிய ஹாரன்கள் பயன் படுத்தப்படுகிறது. சாலைகளின் மேம்பாட்டிற்கு ஏற்ப டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏராளம் அதிகரித்து விட்டது. வாகன போக்குவரத்திற்கு ஏற்ப சாலை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே தெரிகிறது.
சிறுவர்கள் வாகனம் ஒட்டுவது, விதிமுறை தெரியாமல் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்ற போலீசார் கூறியும் ஏற்றுக் கொண்டதாக இல்லை. நாய் குழைப்பது, குழந்தை அழுவது , ஆம்புலன்ஸ் சப்தம் உள்ளிட்ட பலவித ஒலிகளில் ஹாரன் வைத்திருப்பது, லைட் ஒளி அளவை மாற்றுவது என விதிகளை மீறி செயல்படுகின்றனர்.
இவற்றை தவிர்த்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, டூவீலரில் அதிக சப்தம் எமுப்பும் ஹாரன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சக ஓட்டுனர்கள் பொதுமக்கள் பாதிக்கப் படுகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
