பழநி கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை

பழநி, பிப். 16: பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நடந்தது. கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

தமிழ் துறை பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை மாநில ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குநர் சுந்தரஆவுடையப்பன் சிறப்புரையாற்றினர். பாசறையில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

Related Stories: