டேபிள் டென்னிஸ் ஸ்நேஹித் அபாரம்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

சென்னை: டபிள்யுடிடி ஸ்டார் கன்டென்டர் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் நேற்று, இந்தியாவின் ஸ்நேஹித் சுரவஜுலா – ஜப்பானின் மிஸுகி ஓய்காவா மோதினர். இப்போட்டியின் துவக்கத்தில் ஜப்பான் வீரர் சிறப்பாக ஆடி முதல் இரு செட்களை 11-9, 17-15 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார்.

அதன் பின் சுதாரித்து அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஸ்நேஹித், அடுத்த 3 செட்களை, 11-4, 11-6, 18-16 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனால், 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய ஸ்நேஹித், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: