விருத்தாசலம், பிப். 14: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவில் தேவதாஸ் (55) என்பவருக்கு சொந்தமான அகல் விளக்கு தயாரிக்கும் குடோன் உள்ளது. தேவதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று விருத்தாசலம் ஜங்ஷனில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து நடந்த பால்குடம் காவடி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக சென்றனர். அப்போது குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர். ஆனால் இதில் பல லட்சம் மதிப்பிலான அகல் விளக்குகள் தயாரிக்கப்படும் இயந்திரங்கள், அகல்விளக்குகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலத்தில் பரபரப்பு அகல்விளக்கு தயாரிக்கும் தொழில் கூடத்தில் தீவிபத்து பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
- அகல்விலகாஸ்
- விருத்தாசலம்
- தேவதாஸ்
- மாரியம்மன் கோவில் தெரு
- நாச்சியார்பேட்டை, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
- சமயபுரத்து மாரியம்மன்
- கோவில்
- விருத்தாசலம் சந்திப்பு…
