ஜெயங்கொண்டத்தில் திருவள்ளுவர் தின போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு

ஜெயங்கொண்டம், பிப்.13: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் அரசு பள்ளியில் 2057வது திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருவள்ளுவர் ஞான மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

பரஞ்ஜோதி அனைவரையும் வரவேற்றார். மருத்துவர் பத்மப்ரியா, கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் புத்தகம் உருவான வரலாற்றை எடுத்துகூறி வாழ்வில் உலகப்பொதுமறை திருக்குறளை அன்றாடம். படித்து அதன்வழி நடக்க வேண்டும். அப்போது வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் ஏற்படும் திருக்குறளுக்காக அரசு பல திட்டங்களை வகுத்து மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்கின்றது.

அதனால் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட திருகுறளை படித்து அதன் வழி நடந்து வெற்றிபெற வேண்டும் என்று கூறினர். மேலும் திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜெயங்கொண்டம் ஞானமன்றம் சார்பில் சான்றிதழ், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர். இறுதியில் தலைமை ஆசிரியை எழிலரசி நன்றி கூறினார்

 

Related Stories: