தர்மபுரி, ஏப்.1: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணவேனி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெங்கடம்பட்டி மயானத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(47), மாதவராஜ்(42), குமார்(55), சிவா(55), மற்றொரு குமார்(47) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.70,460 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.
