சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. அண்மையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் அரசாணை வெளியிட்டுள்ளது.
