சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த முறை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
