மிட்டாய் உற்பத்தியாளர் சங்க கூட்டம் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைய பயிற்சி

திருச்சி,பிப்.3:திருச்சி மாவட்டம் மணப்பாறை வேளாண் துறை அட்மா திட்டத்தில் முத்தப்புடையான்பட்டி கிராமத்தில் கூட்டுப்பண்ணைய விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மணப்பாறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அபிராமி வரவேற்றார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையை உதவி வேளாண் அலுவலர் அருண், கூட்டுப்பண்ணைய திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான பயன்கள், வங்கிக்கடன், விவசாயிகளுக்கான மானியம், பதிவேடுகள் பராமரிப்பு பற்றியும் பயிற்சி அளித்தார். விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் பதியும் முறைகள் குறித்து முதன்மை செயல் அலுவலர் இலக்கியா விளக்கம் அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்தியசீலன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகிலா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: