சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் (அன்புமணி) மாநிலப் பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாம்பழம் சின்னம் எங்களிடம்தான் இருக்கின்றது. அன்புமணி தலைமையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தான் மாம்பழத்தை வைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி கேட்க நினைத்தால் 60 தொகுதிகளைக் கேட்போம்.
ஆனால், எங்களது கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதால் தொகுதிகள் முக்கியமல்ல. தேர்தலில் எங்களை எதிர்த்து ராமதாஸ் தரப்பிலிருந்து ஆட்களை நிறுத்தினால் அதைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் அதை சமாளிப்போம். விஜய் கட்சி சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்ய சென்றது சினிமா மீது உள்ள ஆர்வக்கோளாறை காட்டுகிறது என்றார்.
