வண்டல் மண் கடத்தியவர் கைது

திருவாரூர் பிப் 5: திருவாரூர் நீர்வளத்துறை வெண்ணாறு பாசன பிரிவு உதவி பொறியாளர் கோவிந்தராஜன், கடந்த 30 ந் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வண்டல் மண் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கிப்பிடித்தனர். சோதனையில் வண்டல் மணல் இருந்தது.

இதுகுறித்து மேல திருமதி குன்னம் கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி உரிமையாளர் விஜயபாபு (47) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் டிராக்டர் உரிமையாளர் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் (60) உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Related Stories: