முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேச்சு!

டெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் தமிழ்நாடு எம்.பி. கமல்ஹாசன் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்; “என் சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மக்களுக்காக பேசுவதற்கு பலர் மன்றத்துக்கு பல வழிகள் திறந்துள்ளது. எனக்கான வழி திரையுலகம் மூலம் திறந்துள்ளது. பரமக்குடியில் பிறந்த குழந்தை திரையுலகம் மூலமாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. அரசியல் தலைவர் அண்ணா மூலமாக தமிழ் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அண்ணா பேசிய அதே அவையில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்தார்.

Related Stories: