பீடி பற்ற வைத்தவர் தீ பிடித்து சாவு

கோவை, ஜன.28: கோவை கணபதி அருகே உள்ள கிருஷ்ணர் கவுண்டர் கல்யாண மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (50). இவர், தனது வீட்டிற்கு முன்புறம் அமர்ந்து இருந்தார். அப்போது, அவர் பீடி பற்றவைத்த போது சட்டையில் தீ பிடித்தது. உடல் முழுவதும் தீ பரவியது.

அவரது குடும்பத்தினர் தீயை அணைத்து உடனடியாக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Related Stories: