காரைக்கால், பிப்.4: வாக்குச்சாவடிகளின் மறு சீரமைப்பு சம்மந்தமாக கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோ சனைக் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குச்சாவடிகளின் மறு சீரமைப்பு சம்பந்தமாக காரைக்காலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சி தலைவருமான ரவி பிரகாஷ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அதிகாரிகளான சச்சிதானந்தம், அருணகிரிநாதன் மற்றும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரி செந்திலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் துணைவாக் காளர் பதிவு அதிகாரிகளான பொய்யாத மூர்த்தி, ரமேஷ், சுரேஷ், செல்லமுத்து உள்ளிட்டோர் கல ந்து கொண்டனர்.
