இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்கள் விடுதலை: 3 பேருக்கு 6 மாதம் சிறை

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து கடந்த டிச.28ம் தேதி கடலுக்கு சென்ற 3 மீனவர்களும், ஜன.2ம் தேதி கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படை சிறைபிடித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது காவல் நேற்று நிறைவடைந்ததால், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், 9 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் சிறை தண்டனை, அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகுகளின் ஓட்டுநர்களான மூவருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் இந்திய மதிப்பில் ரூ.34 லட்சத்து 83 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

Related Stories: