கொளத்தூர் உள்பட 3 சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

 

பெரம்பூர்: கொளத்தூர், பெரம்பூர் மற்றும் திருவிக. நகர் சட்​டப்​பேர​வை தொகு​தி​களில் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு இன்று ​நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்காக சுமார் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 19,594 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி, இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள 16 மையங்களில் தேர்தல் மண்டல அலுவலர்கள் மூலமாக அளிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பணிபுரியும் 1400 பணியாளர்களுக்கு பெரம்பூர் பந்தர் கார்டன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. திருவிக.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதியில் பணிபுரியும் சுமார் 1300 பணியாளர்களுக்கு பெரம்பூர் சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் வகுப்புகள் நடைபெற்றன. திருவிக.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பால்பிரின்ஸ் ராஜ்குமார் தலைமையில் வகுப்புகள் நடைபெற்றன.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பணிபுரியும் 1421 பணியாளர்களுக்கான வகுப்புகள் வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமையில் நடைபெற்றது.இந்த பயிற்சியில் தேர்தல் நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்தும் வாக்குப்பதிவிற்கு வாக்குச்சாவடிகளை சரியாக அமைப்பது குறித்தும் வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது குறித்தும் வாக்கு இயந்திரங்களை சரியாக பயன்படுத்துவது குறித்தும் பல்வேறு படிவங்களை பூர்த்தி செய்வது குறித்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Related Stories: