சட்டமன்றத் தேர்தல் தூதுவர்களான மெய்யன், மெய்யாள் பொம்மை விழிப்புணர்வு அஞ்சல் தலைகள்

*தஞ்சை கலெக்டர் வெளியிட்டார்

தஞ்சாவூர் : தமிழகத்தில் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தல் தூதுவர்களான மெய்யன் மெய்யாள் விழிப்புணர்வு அஞ்சல் தலைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் அருகே 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் நேற்று மெய்யன்-மெய்யாள் தேர்தல் விழிப்புணர்வு சிறப்பு தபால் தலையினை வெளியிட்டார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தேர்தல் தூதுவர்களாக மெய்யன்-மெய்யாள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் குறித்து வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதல் முறையாக மக்கள் பயன்படுத்தும் வகையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தூதுவர்களான மெய்யன்-மெய்யாள் குறித்த விழிப்புணர்வு அஞ்சல் தலைகளை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார்.

மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் நேர்மையாக 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களையும் வழங்கி அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: