தென்னிந்திய மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு சென்னை ஐஐடியில் ‘இன்னோவா’ இறுதிபோட்டி

 

சென்னை: தென்னிந்திய மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான ‘இன்னோவா’ இறுதிப்போட்டி ஐஐடி மெட்ராஸில் இன்று நடைபெற்றது. ஐஐடி முன்னாள் மாணவர்களின் முன்முயற்சியான பிஎஎல்எஸ் அமைப்பின் இன்னோவேஷன் போட்டியான ‘இன்னோவா’ சீரிஸின் 2025-26 இறுதிப் போட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 47 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 64 குழுக்களின் புதுமையான கண்டுப்பிடிப்புகள் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. இது ஓராண்டு கால கண்டுபிடிப்பு மற்றும் வழிகாட்டுதல் பயணத்தின் உச்சகட்ட நிகழ்வாக அமைந்தது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் பொறியியல் அறிவையும் சங்கமிக்கும் இணைப்பாக இருந்தது.

நிஜ உலக சவால்களுக்குத் தீர்வு காண்பதற்காக செயற்கை நுண்ணறிவ, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், தரவு பகுப்பாய்வு மற்றும் ஆட்டோமேஷன் போன்ற துறைகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்கினர். இந்த இறுதிப் போட்டியில், இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்கள் தங்களின் செயல்பாட்டு முன்மாதிரிகளை காட்சிப்படுத்தினர்; இது அவர்களின் படைப்பாற்றல், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்முனைவோர் சிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓவும் நாத் ரவிச்சந்திரன், வெற்றியாளர்களின் சிறந்த சாதனைகளைப் பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ நாத் ரவிச்சந்திரன் பேசுகையில், ‘நடப்பு ஆண்டின் போட்டியில் 62 கல்வி நிறுவனங்களில் இருந்து 272 குழுக்கள் பங்கேற்றன.

அவற்றில் 216 குழுக்கள் 6 மண்டல அளவிலான அரையிறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும் 64 குழுக்கள் மாபெரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இந்தப் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கைக்குரிய திட்டங்களுக்கு மேலதிக ஆதரவும் வளர்ச்சி வாய்ப்புகளும் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்கள் தங்களது யோசனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என்றும் அறிவிக்கப்பட்டது’ என்றார்.

Related Stories: