கட்சியில் சேர வந்திருக்கேன்னு தப்பா எதையாவது போட்டு விட்டுறாதீங்க சாமி: பாடகர் வேல்முருகன் பதற்றம்

சென்னை: கட்சியில் சேர வந்துள்ளேன் என்று தப்பா எதையாவது போட்டு விட்டுறாதீங்க சாமி என்று பின்னணி பாடகர் வேல்முருகன் நக்கல் அடித்தபடி தவெக கட்சி அலுவலகத்திற்குள் சென்றார். தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் அலுவலகமான பனையூரில் நேற்று நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியையும் ஏற்றினார். தொடர்ந்து கலாச்சார நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்வதற்கு நாட்டுப்புற கலைஞர், பின்னணி பாடகர் வேல்முருகன் தன்னுடைய குழந்தையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் கட்சியில் சேர வந்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவரே அய்யயோ, அய்யயோ, சாமி நான் கச்சேரி பாடுவதற்கு தான் வந்துள்ளேன். தப்போ எதையாவது போட்டு விட்டுறாதீங்க, வேல்முருகன் கட்சியில் சேர வந்துள்ளேன் என்று கூறி சிரித்த படியே தவெக கட்சி அலுவலகத்திற்குள் சென்றார்.

Related Stories: