சென்னை: 2024லேயே அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு சென்றுவிட்டோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நான் கூட்டணியில் உள்ள பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். சைக்கிள் சின்னம் கிடைக்காததால் நான் நேரடி கூட்டணியில் உள்ள பாஜகவின் சின்னத்தில் போட்டியிடுகிறேன். நண்பகல் 12.12 மணிக்குதான் வேட்பாளர்களை அறிவிப்பேன்; உங்களுக்கு ஒரு சென்டிமென்ட் என்றால் எனக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு என்று கூறினார்.
