புதுடெல்லி: 2026-27ம் ஆண்டுக்கான ஒன்றிய நிதி பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதில் தமிழ்நாடு முற்றிலும் நிராகரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒன்றிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையடுத்து அவர் கூறியதில்,‘‘தென் இந்தியாவில் ரயில்வேயின் அடுத்த மேம்பாட்டு முன்னெடுப்பாக சென்னை-பெங்களூரு-ஹைதராபாத்’ வழித்தடங்களை அதுவேக புல்லட் ரயில் காரிடர்களாக மாற்றப் போகிறோம். இந்த முக்கோண இணைப்பு ரயில் போக்குவரத்தில் முக்கியமானதாகும். இந்த முயற்சி பொருளாதார மேம்பாடு மற்றும் ஐ.டி மையங்களை இணைக்கும் நோக்கம் கொண்டிருக்கிறது. இந்த புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 1 மணி 13 நிமிடங்களில் சென்றடையலாம். அதேப்போன்று சென்னையிலிருந்து-ஹைதராபாத்துக்கு 2 மணி நேரம் 55 நிமிடங்களில் சென்றடையலாம்’’ என்றார்.
புல்லட் ரயில் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 1 மணி 13 நிமிடங்களில் செல்லலாம்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
- சென்னை
- பெங்களூரு
- மத்திய அமைச்சர்
- அஸ்வினி வைஷ்ணவ்
- புது தில்லி
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- யூனியன் பட்ஜெட்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் ரயில்
- அமைச்சர்
- தில்லி
