ராம நவமி ஊர்வலத்தில் கலவரத்தை தூண்டியது பாஜ தான்: திரிணாமுல் காங். குற்றச்சாட்டு

 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூர் மாவட்டத்தின் லாப்பூர் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது, \” மேற்கு வங்க மக்கள் பாரம்பரியமாக அனைத்துப் பண்டிகைகளையும் நல்லிணக்கத்துடன் கொண்டாடி வருகின்றனர். துர்கா பூஜை, காளி பூஜை, ஜகத்தாத்ரி பூஜை, ஈத், சத் பூஜை, கிறிஸ்துமஸ், சமண சமூகத்தினரின் ஊர்வலங்களின்போது ஏதேனும் கலவரம் அல்லது மோதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக நீங்கள் கேள்விப்பட்டு உள்ளீர்களா?

அப்படியிருக்கையில் ராம நவமி போன்ற ஒரு புனிதமான நிகழ்வை பாஜவினர் வன்முறை மற்றும் குழப்பத்தை தூண்டுவதற்கு ஏன் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? பாஜ என்றாலே கலவரக்காரர்கள் என்று தான் அர்த்தம். பாஜவும் அவர்களது கூட்டாளிகளும் ராம நவமி ஊர்வலங்களுக்கு கூலிப்படைகளை அழைத்து வருகின்றனர். அவர்கள் கைகளில் வாள்களை ஏந்தியவாறு பொதுவெளியில் மது அருந்தி அட்டகாசம் செய்கின்றனர். பாஜ தலைவர்களுக்கும், அவர்களது துணை அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ராம நவமி ஊர்வலங்களின்போது மட்டுமே ஏன் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதாக தகவல் வருகின்றது?” என்றார்.

Related Stories: