மனிதநேய வார நிறைவு விழாவில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்

பெரம்பலூர்,ஜன.30: பெரம்பலூரில் நடந்த மனித நேய வார நிறைவு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர்  வெங்கடபிரியா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமை வகித்தார். விழாவில்.பள்ளி மா ணவ, மாணவியரிடையே நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வெங்கட பிரியா பரிசுகளை வழ ங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டி, உள்ளிட்ட அரசு அலு வலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காத்துக்கிடந்த மாணவ மாணவியர்: பெரம்பலூர் கலெக்டர் அலு வலகக் கூட்ட அரங்கில் நே ற்று மாலை 4மணிக்கு மனித நேய வார விழா நடைபெ றும் எனஅறிவிக்கப்பட்டிரு ந்தது. இதற்காக மதியம் 1 மணிக்கு முன்பாகவே பல்வேறு ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் அந்தந்தப் பள்ளிகளுக்கு வரவ ழைக்கப்பட்டு, பிறகு 2 மணிக்கெல்லாம் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். விழாவில் எம்பி, எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்காத நிலையில், கலெக்டரும் 5 மணிக்குதான் கூட்ட அரங்கிற்கே வருகை தந்தார். இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பள்ளி மாணவ, மாணவியர் மனித நேய வார விழா அரங்கில் மனித நேயமே இல்லாமல் காக்க வைக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: