ஒரு வாரத்தில் தொகுதி பங்கீடு: செல்வப் பெருந்தகை தகவல்

திருவாரூர்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருவாரூரில் நேற்றிரவு நிருபர்களுக்கு கூறுகையில், ‘எடப்பாடி பழனிச்சாமி போல் கனிமொழி எம்பி முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் சென்று தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. சிங்க பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அதன்படி, ஒரு வார காலத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை காங்கிரஸ் தலைமை, திமுகவின் தலைமையும் இணைந்து முடிவு செய்யும். எங்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவோம். அதற்காக திமுகவிற்கு நெருக்கடிகளை அளிக்க மாட்டோம்’ என்றார்.

Related Stories: